தமிழ்நாடு

மக்கள் வரி பணத்தில் வரும் திட்டத்திற்கு தனிநபர் பெயர் வைப்பது வரவேற்கத்தக்கது அல்ல- பிரேமலதா விஜயகாந்த்

ஜன.9ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதுவரை கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக பதில்

மக்கள் வரி பணத்தில் வரும் திட்டத்திற்கு தனிநபர் பெயர் வைப்பது வரவேற்கத்தக்கது அல்ல- பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகரில் வீற்றிருக்கும் உலகப்புகழ் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையான நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களின் இரண்டு மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

ஜன.9ம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் சந்தித்ததை குறித்து எழுதிய கேள்விக்கு, உடல் நலம் சரியில்லாத காரணத்தினால், அரசியல் நாகரீகத்துடன் பண்பாடுடனும் நட்பு ரீதியாக சந்தித்தோம் என்றார்.

கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, நாளை மறுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்தச் சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்தும் அதேபோன்று கட்சி நிர்வாகிகளை வருகின்ற தேர்தலுக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனைகளும் நடத்தவும், இருப்பதால் இப்போதைக்கு கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக பதில் அளித்தார். வருகின்ற ஜனவரி 9ம் தேதி மாநாடு நடைபெறுகிறது.அதில் தான் கூட்டணி பற்றி தகவல் கூறப்படும்.

தனிநபர் பெயர் வைப்பது வரவேற்கத்தக்கதல்ல


தொடர்ந்து படுகொலைகள் நடைபெற்று வருகிறது என்ற கேள்விக்கு, தமிழ்நாடு முழுவதும் படுகொலைகள், சிறுவர், சிறுமிகள் மீதான பாலியல் வனப்புணர்வு செய்வது சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்வி குறியாக இருக்கிறது என்பதற்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மக்கள் நலத்திட்டத்திற்கு முதலமைச்சர் பெயர் வைக்ககூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை குறித்து எழுதிய கேள்விக்கு, ஆட்சியானது மக்களுடைய வரிப்பணத்தில் தான் நடக்கிறது. மக்கள் பணத்தில் வரும் திட்டம் எந்த ஒரு தனிநபர் பெயர் வைப்பது வரவேற்பு கூறியது அல்ல. அது தவறான முன்னுதாரணம்.

ஆட்சியாளர்கள் நடவடிக்கை

தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் குறித்த கேள்விக்கு, காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்செல்லும் குற்றவாளிகளை துன்புறுத்தி அடிக்கும் காட்சியானது வெளியாகி வருகிறது.இதற்கு நீதி அரசர்கள்தான் இதற்கு தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று தற்போதைய ஆட்சியாளர்கள்தான் அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கூறினார்.

திமுக நல்லாட்சி வருகின்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றியடைவோம் என்று கூறி வருகின்றனர் என்ற கேள்விக்கு, அரசியல் என்பது நம்பிக்கை தான். அதனால்தான் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பாக அமையும். வருகின்ற தேர்தலில் பார்ப்போம் என தெரிவித்தார்.