தமிழ்நாடு

அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை.. கிலோவுக்கு ரூ.20,000 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை.. கிலோவுக்கு ரூ.20,000 அதிகரிப்பு!
Gold and Silver Rate
தொடர்ச்சியான விலை உயர்வால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு, வாடிக்கையாளர்களையும் முதலீட்டாளர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.880-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் விலையில் அதிரடி ஏற்றம்

தினசரி விலை மாற்றங்களுக்கு உள்ளாகும் தங்கம், இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் தற்போது ரூ.1,04,000 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்து, ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று பெருமளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி இன்று ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்து, ரூ.2,74,000 என்ற அதிர்ச்சியூட்டும் விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.274-க்கு விற்பனையாகிறது.

நகைப் பிரியர்கள் கவலை

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் போட்டி போட்டுக் கொண்டு ஏறி வருவதால், நகை வாங்குவதற்குத் திட்டமிட்டிருந்த நகைப் பிரியர்களும், முதலீட்டாளர்களும் எதிர்கால விலை நிலவரம் குறித்துக் கடுமையான கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.