தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை சரிவு!
Gold Rate
தமிழகத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், ஒரு முக்கிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்தைக் கடந்து விற்பனையாகி வருவது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 6 நாட்கள் தங்கம் விலை

கடந்த 7 ஆம் தேதி சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்த நிலையில், 9 ஆம் தேதி மீண்டும் ரூ. 1,840 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு வந்த நாட்களிலும் விலை ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்பட்டது. புதன்கிழமை அன்று சவரன் ரூ. 1,18,320 வரை சென்று அதிர்ச்சியளித்த நிலையில், வியாழக்கிழமை விலை சற்றே குறையத் தொடங்கியது.

இன்றைய விலை நிலவரம்

தொடர் உயர்வால் கவலையில் இருந்தவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ரூ. 1,15,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமின் விலை ரூ. 14,400 ஆக உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 20 சரிந்து, ஒரு கிராம் ரூ. 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை தற்போது ரூ. 2,80,000 ஆக உள்ளது.