தமிழகப் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்டம் தோறும் தலைமையாசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடல் மற்றும் ஆய்வுக்கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.
தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல்
பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதற்காக, சிறப்பான திட்டங்களை வகுத்துள்ள தலைமையாசிரியர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. மேலும், மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் அடைவுத் தேர்வு மற்றும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த தகவல்கள், மாணவர்களிடையே ஏற்படும் ஜாதிய மோதல்களைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
பள்ளிகளை மூடுவது குறித்த விளக்கம்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "இந்த ஆய்வுக் கூட்டம் 23-வது மாவட்டமாக திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்குத் தேவையான அம்சங்கள் குறித்துக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். எந்த அரசும் பள்ளிகளை மூட வேண்டும் என நினைக்கவில்லை. கடந்த கல்வியாண்டு முதல் இந்த கல்வியாண்டு வரை புதிதாக நான்கு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட 207 பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி 2015-ஆம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேலும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக பலர் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இது போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை இல்லாமல் போய் உள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், மூடப்பட்ட பள்ளிகள் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், பள்ளி செல்லும் வயதில் உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து, இ-பதிவேட்டில் பதிவேற்றி, பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
'விஞ்ஞான வழியில் செயல்படுகிறோம்'
பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விண்வெளிக்குச் சென்றது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். “அவர் தனது நம்பிக்கை சார்ந்து பேசியுள்ளார். அவ்வாறு பேசுவது அவரது விருப்பம். அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், நாங்கள் அறிவியல் சார்ந்து, முற்போக்கு சிந்தனையோடு, தந்தை பெரியார் வழியில், தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறோம். அறிவைச் சார்ந்துள்ள எங்கள் பாதையில் பயணிக்க விரும்புபவர்கள் வரலாம்” என்று கூறினார்.