தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை 9 மணிக்கு ஏர்-இந்தியா விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ஆளுநருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை 26ம் தேதி காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு நாள் பயணமாக திடீரென புறப்பட்டு சென்று அன்று இரவு சென்னை திரும்பினார். இந்த நிலையில் இன்று மீண்டும் 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். டெல்லி பயணத்தை முடித்து கொண்டு வரும் ஜூலை 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.10 மணிக்கு, ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த திடீர் டெல்லி பயணம் குறித்து, ராஜ்பவன் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் ஒரே வாரத்தில் 2வது முறையாக 4 நாட்கள் பயணமாக டெல்லி செல்வதால் முக்கிய பிரமுகர்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.