தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. கடந்த ஆறு மாதங்களில் உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றிய சபாநாயகர் மு. அப்பாவு, இன்றைய கூட்டத்தொடரை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இரங்கல் தீர்மானங்கள்
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியவுடன், முதலில் கடந்த 6 மாதங்களில் மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, கரூரில் நடந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கும் பேரவை அஞ்சலி செலுத்தியது. அதன் பின்னர், மறைந்த கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா வெங்கடேசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
இந்த இரங்கல் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றைய நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
நாளை (அக்.15), 2025-2026ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.