தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்த நிலையில், மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடைசியாக 2003-ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போன்ற ஒரு சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்றது. இந்தப் பணிகளின் முடிவில், தூய்மையான மற்றும் மேம்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.
97 லட்சம் பெயர்கள் நீக்கம்: பின்னணி என்ன?
சிறப்புத் திருத்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு, அக்டோபர் 2025 நிலவரப்படி தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இந்தப் பணியின் போது, உயிரிழந்தவர்கள், ஒரே நபர் இரண்டு இடங்களில் பதிவாகி இருப்பது (Double Entry) மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் குறித்துத் தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. இதில்:
இறந்தவர்கள்: 26.95 லட்சம் பேர்
இரட்டைப் பதிவு: 3.98 லட்சம் பேர்
முகவரியில் இல்லாதவர்கள்: 66.44 லட்சம் பேர்
என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதனால் டிசம்பர் மாதம் வெளியான வரைவுப் பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது.
புதிதாக இணைந்த வாக்காளர்கள்
வரைவுப் பட்டியல் வெளியான பிறகு, டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இணையதளம் மற்றும் படிவங்கள் வாயிலாக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் கள ஆய்வு செய்து சரிபார்த்த பிறகு, தகுதியானவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.
இறுதிப் புள்ளிவிவரங்கள்
இன்று மதியம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380 ஆகும். இதன் விரிவான விவரம்:
பெண் வாக்காளர்கள்: 2,89,60,838
ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925
மூன்றாம் பாலினத்தவர்: 7,617
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரிபார்ப்பது எப்படி?
வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய ECI Net செயலி அல்லது voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானாலும் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம்" எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7