புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே உள்ள நாசரேத் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த வில்லியம்ஸ் பால்ராஜ் (52) என்பவர் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக் கணித பாடம் எடுக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
பாலியல் சீண்டல்
இந்நிலையில் கணித ஆசிரியர் வில்லியம்ஸ் பால்ராஜ். அவர் பணிபுரியும் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் வகுப்பறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் மாணவியின் டி.சியை வாங்கிக்கொண்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாணவிக்குப் பாலியல் சீண்டல் கொடுத்த ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு டிசி கொடுத்து அனுப்பிவிட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் முதல்வரிடம் ஐந்து மாணவிகள் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
அதிகாரிகள் விசாரணை
இதையடுத்து அந்தப் பள்ளியின் முதல்வர் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகத்திடம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் உடனடியாகக் குழந்தைகள் பாதுகாப்பு நல குழு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகள் அப்பள்ளிக்குச் சென்று மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தியதில் அப்பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் வில்லியம்ஸ் பால்ராஜ் 11ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இதனைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினர் இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆசிரியர் கைது
இந்தப் புகாரின் அடிப்படையில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் வில்லியம்ஸ் பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து இன்று புதுக்கோட்டை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.