சென்னை கேகே நகர் ஏவிஎம் மெய்யப்பன் சாலையில் பதிக்கப்பட்டு இருந்த மின்சார கேபிள் வயர் பழுதடைந்ததால் நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஏழு பேர் அதனை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மூவரும் மின்வாரிய ஊழியர்களிடம் இங்கு வேலை நடக்க வேண்டும் என்றால் மாமூல் கொடுக்க வேண்டும் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து தகராறு முற்றியதால் 3 பேரும் மின்வாரிய ஊழியர் பாஸ்கர் என்பவரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து மின்வாரிய ஊழியரான பாஸ்கர், கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மதுபோதையில் இருந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மின்வாரிய ஊழியரை தாக்கியது திமுக 136-வது வார்டு வட்ட பொருளாளர் கார்த்திக் மற்றும் விஜய், சுரேஷ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு மூவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.