தமிழ்நாடு

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஆளுநர் கம்பு சுற்ற வேண்டும்.. தமிழகத்தில் அல்ல - முதல்வர் சாடல்!

தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஆளுநர் கம்பு சுற்ற வேண்டும்.. தமிழகத்தில் அல்ல - முதல்வர் சாடல்!
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஆளுநர் கம்பு சுற்ற வேண்டும்.. தமிழகத்தில் அல்ல - முதல்வர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதால், அங்கேதான் ஆளுநர் கம்பு சுத்த வேண்டும் என்று அவர் சாடினார்.

அரசுத் திட்டங்கள் துவக்கம்

தர்மபுரி மாவட்டத்தில், இ-கிசான் கிரெடிட் கார்டு (E-KCC) திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பயிர்க் கடனுக்கு விண்ணப்பித்து, அன்றைய தினமே கடன் பெற முடியும். மேலும், ₹1,705 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஆளுநர்மீதான தாக்குதல்

கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், ஆட்சிக்கு எதிராகச் சில விஷமிகள் அவதூறுகளைப் பேசுகின்றனர். எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது அவர்களுடைய அரசியல் அவர்களை விடவும் மலிவான அரசியல் செய்வது பாஜக அரசு ஒன்றிய ஆளுநர். திமுக ஆட்சிமீது அவதூறு பரப்புகின்றார். திராவிடத்தை பழிப்பார். சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார். இல்லாத திருக்குறளை அச்சிட்டுத் தருவார். தமிழ் தாய் வாழ்த்து அவமதிப்பார். தமிழ்நாட்டு வரக்கூடிய மாணவர்களை இழிவு படுத்துவார். உண்மைக்குப் புறம்பாக இல்லாத பொல்லாதவர்களை பேசிப் பீதியை கிளப்புவார். இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாகவும் இதை ஒன்றிய பாஜக அரசு வெளியிடுகின்ற புள்ளி விபரமே சாட்சி என்று கூறினார்.

பாஜக ஆளும் மாநிலங்கள்மீது விமர்சனம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாகவும், இதற்கு மத்திய பாஜக அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களே சாட்சி என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில், பாஜக ஆளும் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். எனவே, ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல, பாஜக ஆளும் மாநிலங்களில்தான் என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.