காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கட்சித்தொண்டர்களிடையே பேசியதாவது,
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் முன்னிலையில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இம்மாதம் 31ஆம் தேதி நடைபெறவிருந்த மதச்சார்பின்மை காப்போம் பேரணி வருகின்ற ஜூன் 14ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அந்த மாநாட்டிற்கு காஞ்சிபுரத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை புரிந்து வெற்றி பேரணியாக அமைய வேண்டும் என்றும், தமிழ்நாடு திரும்பிப் பார்க்கும் பேரணியாக அமைய வேண்டும் என்றும், அகில இந்திய அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாக அமைய வேண்டும், மேலும் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் மாபெரும் பேரணியில் பங்கேற்கிறோம் என எண்ணி அனைவரும் இன்னும் இருக்கக்கூடிய நாட்களில் தயாராக வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு பெரும் தீங்கு இந்த தேசத்தை சூழ்ந்து இருக்கின்றது என்றும் அந்த அரசியல் அமைப்பிற்கு உயிர் மூச்சாக இருக்கின்ற மதசார்பின்மைக்கு ஆபத்து சூழ்ந்துள்ளது ஆகவே யாருக்கு அக்கறை இருக்கிறதோ? இல்லையோ? யாருக்கு பொறுப்பு இருக்கிறதோ? இல்லையோ? புரட்சியாளர் அம்பேத்கரின் உண்மையான வாரிசுகளாக களத்திலே பணியாற்றுகின்ற அந்த பொறுப்பு இருக்கிறது என்றும், திருச்சிராப்பள்ளியிலே எத்தனை லட்சம் பேர் வந்தார் என்று யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு அங்கே விசிகவினர் கூட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் திமுக ஒன்றிய குழு துணை சேர்மன் மாலதி போஸ்கோ,அதிமுக புரட்சி பாரதம், காங்கிரஸ் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.