தமிழ்நாடு

"எனக்கும் விஜய்க்கும் திருமாவளவன்தான் பிரசவம் பார்த்தார்": சீமான் நக்கல்!

“என்னையையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது, பிரசவம் பார்த்தது எங்கள் அண்ணன் திருமாவளவன் தான்” என்று சீமான் பதிலளித்துள்ளார் .


Seeman
சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். கூட்டத்திற்குப் முன்பு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் விமர்சனம் குறித்துச் சீமான் நகைச்சுவையாக பதிலளித்தார்.

சமீபத்தில், விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, "சீமானும், விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள்" என்று விமர்சித்திருந்தார். இது குறித்துச் செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த சீமான், "என்னையும், தம்பி விஜய்யையும் பற்றி ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என எனது அண்ணன் திருமாவளவன் கூறி இருக்கிறார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களைப் பெற்றெடுத்தபோது அவர்தான் அருகில் இருந்து பிரசவம் பார்த்தார்," என்று நக்கலாகக் கூறினார்.

மேலும், "காலம் காலமாக என்னை போலித் தமிழ்த் தேசியவாதி என்றும் அவர் கூறி வருகிறார். அண்ணன்தானே பேசுகிறார். அதனை விடுங்கள்" என்று அவர் பதிலளித்தார்.

சுமார் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.