தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம் விலை சற்று குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம் விலை சற்று குறைவு!
Gold Rate
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சவரன் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 10) தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாகிறது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை

கடந்த 7 சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்த நிலையில், நேற்று அதிரடியாக ரூ. 1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,17,200 என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியது. இந்தத் தொடர் உயர்வால் நடுத்தர மக்கள் கலக்கத்தில் இருந்த நிலையில், இன்று விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,16,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,580-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கத்தின் விலை ஒருபுறம் ஏறிக் கொண்டிருந்த அதே வேளையில், வெள்ளியின் விலையும் அண்மையில் பெரும் உயர்வைச் சந்தித்திருந்தது. ஆனால், இன்று வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3 லட்சம் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது.