நீலகிரியிl கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் உதகை உள்ளிட்ட்ட இடங்களில் மண்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டால் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய மீட்பு குழுவினர், தமிழ்நாடு மீட்பு குழுவினர் நீலகிரிக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலா ஸ்தலங்களான பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா சிகரம்,லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்கள் மூடப்படுகிறது என வனத்துறையினர் நேற்று மாலையே தெரிவித்திருந்தது.
இதனை அறியாத கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் உதகை அருகேயுள்ள எட்டாவது மைல் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது அங்கு பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில், எதிர்பாராத விதமாக மரம் விழுந்து கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த சிறுமி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து வனத்துறை பல்வேறு இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், அது தெரியாமல் சென்று மரக்கிளை விழுந்து சிறுமி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.