நடிகர் KPY பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் காந்தி கண்ணாடி. சமீபத்தில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை ஷெரீப் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் இன்று புகார் கொடுத்துள்ளனர்.
KPY பாலா மீது புகார்
சிவசேனா கட்சி (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர் வேணுகோபால்ஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
"காந்தி கண்ணாடி" தமிழ் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியிலும், வசனத்திலும், பாடல்களிலும் பிரதமர் மோடி குறித்து இழிவுப்படுத்துவது இடம்பெற்றுள்ளது. திரைப்பட இயக்குனர், பிரதமரை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார்.
இது மக்களை குழப்பத்தில் தள்ளும் செயல். ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்து பொருளாதார மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி வழிவகுத்துள்ளார். ஆனால் இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மக்களின் மன நிலையை மாற்றும் செயலை செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த படத்தில் நடித்த கேபிஒய் பாலா, பாலாஜி சக்திவேல், இயக்குனர் ஷெரீப் உள்ளிட்டோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள், பாடல் வரிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று மாநில அமைப்பாளர் வேணுகோபால்ஜி தெரிவித்துள்ளார்.
காந்தி கண்ணாடி வசூல்
‘ரணம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ஷெரீப். இப்படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ‘காந்தி கண்ணாடி’. மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றிருக்கும் காந்தி கண்ணாடி திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் 1.8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.