தமிழ்நாடு

வெள்ளையங்கிரி மலையேறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு…வனத்துறை விசாரணை

வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளையங்கிரி மலையேறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு…வனத்துறை விசாரணை
வெள்ளையங்கிரி மலையேறிய பெண் உட்பட 2 பக்தர்கள் உயிரிழப்பு
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை வெள்ளையங்கிரி மலை ஏறி சுவாமி செய்வதற்காக பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாக இன்று மதியம் முதல் தற்காலிகமாக மலை ஏறுவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பக்தர்கள் இருவர் பலி

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கௌசல்யா என்பவர் வெள்ளையங்கிரியில் ஏழாவது மலையிலும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற பக்தர் ஐந்தாவது மலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மலை ஏறிய பக்தர்களை கீழே இறங்குமாறு இன்று மதியம் முதல் வனத்துறையினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். கனமழை காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி வலியுறுத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.