தமிழ்நாடு

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாகப் பணியாற்றி வரும் ஜி. வெங்கடராமன், கூடுதலாகத் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பையும் கவனிப்பார் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழக காவல்துறையில் பொறுப்பு டிஜிபி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறையின் தலைமையகப் பிரிவின் டிஜிபியாக இருந்த வினீத் தேவ் வான்கடே, காவலர் வீட்டு வசதி வாரியத்தின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாகப் பணியாற்றி வரும் ஜி. வெங்கடராமன், கூடுதலாகத் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பையும் கவனிப்பார் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழக காவல்துறையில் பொறுப்பு டிஜிபி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஜி. வெங்கடராமன், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், நிர்வாகப் பிரிவில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

"காகிதமில்லா காவல்துறை":

நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது, தமிழக காவல்துறையில் "காகிதமில்லா பணியை" (Paperless work) அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

பணி அனுபவம்:

இவர் சிபிசிஐடி, சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியாற்றி, பல முக்கிய வழக்குகளைக் கையாண்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார்.

பணியாற்றிய இடங்கள்

வெங்கடராமன் தனது காவல் பணியை 1996-ல் திருச்செந்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராகத் தொடங்கினார். அதன் பின்னர், கோவில்பட்டி, ராமநாதபுரம், மதுரை, பெரம்பலூர் மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

சிபிஐ-யின் மத்திய அரசுப் பணிக்குச் சென்று, அங்கு எஸ்பியாகவும், பின்னர் டிஐஜியாகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. அதன் பிறகு மீண்டும் தமிழக காவல்துறைக்குத் திரும்பி, சிபிசிஐடி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

வரலாற்றுப் பின்னணி

தமிழக காவல்துறையில், இதற்கு முன்னர் 2011-ஆம் ஆண்டில் கே. ராமானுஜம் கூடுதல் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, 2016-ல் உளவுத்துறை டிஜிபியாக இருந்த டி.கே. ராஜேந்திரனுக்கு, சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறை தற்போது வெங்கட்ராமனுக்கும் தொடர்கிறது.