பொதுமக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்கும் நோக்கத்தோடு வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். ஆனால், சமீப நாட்களாக தனியார் துறை வங்கிகள் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக கட்டணங்களை வசூலித்து வருவது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியினை உண்டாக்கியது.
இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநரான ஐசிஐசிஐ வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்பினை பன்மடங்கு அதிகரித்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு புதியதாக ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு தொடரும் வாடிக்கையாளருக்கு தான் என்றாலும், பழைய வாடிக்கையாளர்கள் வங்கியின் நடவடிக்கைகளை கண்டு அதிர்ந்து போனார்கள்.
முன்பு உயர்த்தப்பட்ட தொகை எவ்வளவு?
பெருநகரங்கள்/மெட்ரோ (Metro and Urban Locations) பகுதிகளில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் கணக்கு தொடங்குபவர்களின் வங்கிக்கணக்கில் குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்பு (Minimum Average Balance) ரூ.50,000- இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்த தொகை ரூ.10,000 ஆக தான் இருந்தது.
இதை போல் நகர்புறங்களில் (Semi urban locations) உள்ள வங்கிக்கிளையில் குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத்தொகை ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு முன்னதாக இந்த தொகை ரூ.5000 மட்டுமே இருந்தது.
கிராமப்புற வங்கி கணக்குகளுக்கு மாதாந்திர மினிமம் பேலன்ஸ் ரூ.2500-லிருந்து ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு:
இந்தியாவில் இன்னும் 80 சதவீதத்திற்கும் அதிகமான நபர்களின் மாதாந்திர சம்பளமே ரூ.40,000-க்கு கீழ் உள்ள நிலையில் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் தொகையினை ரூ.50,000 என நிர்ணயிப்பது வேடிக்கையானது என சமூக வலைத்தளங்களில் ஐசிஐசிஐ வங்கியின் நடவடிக்கையினை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.
அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மினிமம் பேலஸ் வரம்பினை குறைத்து ஐசிஐசிஐ புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ்- புதிய வரம்பு என்ன?
பெருநகரங்கள்/மெட்ரோ (Metro and Urban Locations) பகுதிகளில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் கணக்கு தொடங்குபவர்களின் வங்கிக்கணக்கில் குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்பு (Minimum Average Balance) ரூ.50,000- ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதனை ரூ.15,000 ஆக குறைத்துள்ளது.
இதை போல் நகர்புறங்களில் (Semi urban locations)உள்ள கிளைகளில் மினிமம் பேலன்ஸ் ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்ட நிலையில் அதனை ரூ.7,500-ஆக குறைத்துள்ளது. கிராமப்புற வங்கி கணக்குகளுக்கு மாதாந்திர மினிமம் பேலன்ஸ் வழக்கம் போல் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை குறைந்தப்பட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையினை வாடிக்கையாளர் பராமரிக்கவில்லை எனில், பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ.500 (இதில் எது குறைவோ) அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-க்கு முன்பு வரை ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு தொடங்கியவர்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அளவுக்கு பராமரிக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.