அமெரிக்காவில் ஐஃபோன்கள் தயாரிப்பு இல்லை எனில், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ள நிலையில், அவரிடம் நேரடியாகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐஃபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என டிம் குக்-க்கு ஏற்கனவே வலியுறுத்தியதாகவும் அமெரிக்காவுக்கு வெளியே எங்கும் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடாது எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிம் குக்கிடம் ஏற்கனவே “ஐஃபோன்கள் அனைத்தும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியதாகவும், இந்தியா உட்பட எந்தவொரு வெளிநாட்டு உற்பத்தி மையமும் இந்த வரிவிதிப்பிலிருந்து விலக்கு பெற முடியாது எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற வரி விதிப்புகள், ஆப்பிள் நிறுவனம் மற்றும் தொழில்துறையையே பெரிதும் பாதிக்கும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இத்தகைய வணிகக் கட்டுப்பாடுகள், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அமைந்துள்ளன. ஆனால், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுக்கு இது செலவு மற்றும் உற்பத்தித் திறனை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
தற்போது, ஆப்பிள் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தொழிற்சாலைகளை கொண்டு செயல்படுகிறது. ட்ரம்பின் நிபந்தனைகள் அமலாகுமாயின், ஆப்பிள் உற்பத்தி முறைமையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.