உலகம்

புத்த துறவிகளுடன் உறவு.. கோடிக்கணக்கில் பணம் பறித்த பெண்

தாய்லாந்தில் ஒரு இளம் பெண் புத்தத் துறவிகளை தனது வலையில் சிக்கவைத்து கோடிக்கணக்கான பணம் பறித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புத்த துறவிகளுடன் உறவு.. கோடிக்கணக்கில் பணம் பறித்த பெண்
Relationship with Buddhist monks- Woman who extorted crores of rupees
தாய்லாந்தில் ஒரு இளம் பெண் 9 புத்தத் துறவிகளை தனது வலையில் சிக்கவைத்து கோடிக்கணக்கான பணம் பறித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் துறவிகளுடன் நெருக்கமாக இருந்த அதை வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து மிரட்டிப் பணம் பறித்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திடுக்கிடும் சம்பவம் மற்றும் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து காவல்துறையினர் 'மிஸ் கோல்ஃப்' என்று அழைக்கப்படும் விலாவன் எம்சாவத் என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு துறவிகளுடன் நெருக்கமாகப் பழகி, அவற்றை வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களாகப் பயன்படுத்தி மிரட்டி வந்துள்ளார். இவர்களிடமிருந்து சுமார் ரூ.100 கோடி (385 மில்லியன் பாட்) வரை பணம் பறித்து, அந்தப் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்திலும் செலவழித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாங்காக்கில் உள்ள ஒரு பிரபல புத்தத் துறவிகள் மடத்தின் தலைமைத் துறவி ஒருவர் திடீரென தனது துறவறத்தை விட்டு வெளியேறிய சம்பவம் போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. இந்தத் துறவியை யாரேனும் மிரட்டினார்களா என்ற விசாரணையில், 'மிஸ் கோல்ஃப்' உடனான உறவுதான் காரணம் என்பது தெரியவந்தது. அந்தப் பெண் துறவியுடன் நெருக்கமாக இருந்த பிறகு, தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை ஆதரவு தொகையாக 7.2 மில்லியன் பாட் (சுமார் ரூ.2 கோடி) கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். இதன் பின்னரே அந்தத் துறவி தனது துறவறத்தை கைவிட்டிருக்கிறார்.

ஆதாரங்களும் விசாரணையும்

போலீசார் 'மிஸ் கோல்ஃப்' வசித்து வந்த நோந்தபுரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கைப்பற்றினர். அவரது கைப்பேசிகளிலும் துறவிகளை மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆதாரங்கள் அனைத்தும் துறவிகளை மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டவை என காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, 'மிஸ் கோல்ஃப்', கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், இதே முறையில் 9 துறவிகளை மிரட்டி 385 மில்லியன் பாட் பணத்தைப் பறித்திருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இந்த பணம் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டத்திலேயே செலவழிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தாய்லாந்து புத்த மத அமைப்பையே உலுக்கியுள்ளது. வழிகாட்ட வேண்டிய தலைமை குருவே இதுபோன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்து நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசின் நடவடிக்கை

இதன் எதிரொலியாக தாய்லாந்து நாட்டு அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மோசமாக நடந்து கொள்ளும் துறவிகள் குறித்து புகார் அளிக்க சிறப்பு ஹாட்லைன் தொலைபேசி எண் ஒன்றையும் தொடங்கியுள்ளது. மேலும், தவறாக நடந்து கொண்ட ஒன்பது துறவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் தவறு செய்தது உறுதியாகும் வகையில் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூன் மாதம் 81 துறவிகளுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பட்டங்களையும் தாய்லாந்து நாட்டு அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது. புத்த மத துறவிகள் என்பவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள், அவர்களை கடவுளின் தூதர்கள் போல் அந்த நாட்டு மக்கள் வணங்கி வந்த நிலையில், தற்போது ஏராளமான துறவிகள் உல்லாச வலையில் சிக்கியதை அடுத்து தாய்லாந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.