பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாகச் சாடிய பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற பிரதமர் மோடியை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
"பயங்கரவாதத்திற்கு இரட்டை வேடம் வேண்டாம்"
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடிப்படையாகும். ஆனால், பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதம் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான சவாலாகும். எந்த நாடும், எந்த சமூகமும், எந்த குடிமகனும் அதிலிருந்து தன்னைப் பாதுகாப்பாகக் கருதிக் கொள்ள முடியாது.
கடந்த 40 ஆண்டுகளாகப் பயங்கரவாதத்தின் கோரமான பக்கத்தை இந்தியா சந்தித்து வருகிறது. சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதல் மனிதநேயத்தை நம்பும் ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு நபருக்கும் ஒரு சவால். இந்தத் துயரமான காலகட்டத்தில் எங்களுடன் உறுதுணையாக நின்ற நட்பு நாடுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நாம் தெளிவாகவும், ஒருமனதாகவும் கூற வேண்டும். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நாம் ஒருமனதாக எதிர்க்க வேண்டும். இதுவே மனிதநேயத்தின் மீதான நமது கடமை" என்று வலியுறுத்தினார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கு
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS) கீழ், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"கூட்டுத் தகவல் நடவடிக்கை மூலம் அல்கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியா முன்முயற்சி எடுத்தது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுவதற்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.