உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை என அமெரிக்கா அறிவிப்பு: சீனா கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி நிலவும் பதற்றம் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை என அமெரிக்கா அறிவிப்பு: சீனா கடும் எச்சரிக்கை!
America and China
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி நிலவும் பதற்றம் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது.

பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்று மாலை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த முற்றுகையின் மூலம், ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்துக் கப்பல்களையும் தடுக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.

சீனாவின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவிற்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் 40% எண்ணெய் இறக்குமதி மற்றும் 30% இயற்கை எரிவாயு தேவை இந்த ஜலசந்தி வழியாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தங்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் எனச் சீனா கருதுகிறது. "எங்கள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிப்பது எங்களின் உள்நாட்டு விவகாரம்; இதில் யாரும் தலையிடக் கூடாது" என்று சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜுன் எச்சரித்துள்ளார்.

ஈரானின் பதிலடி எச்சரிக்கை

மறுபுறம், இந்த முற்றுகைக்கு ஈரான் புரட்சிகர காவல்படை கடும் எதிர்வினையாற்றியுள்ளது. ஒருவேளை ஈரானிய துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள மற்ற நாடுகளின் எந்தவொரு துறைமுகப் பாதுகாப்புக்கும் தாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.