K U M U D A M   N E W S

Author : Sumalekha M

“Content Material அல்ல... தொலைநோக்கு பார்வை!” - உதயநிதிக்கு மறைமுக பதில் சொன்ன வைகோ?

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வை, சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் “வெற்றி தமிழகம்” திட்டம் ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்பதில் உறுதி!” – அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“காப்பி-பேஸ்ட் அரசு; ரீல்ஸ் வெறியில் தவெக!” – உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் ஆளுநர் உரையில் திருத்தங்கள் செய்த ஆளுநர், தற்போது தவெக அரசு தயாரித்த உரையை எந்த மாற்றமும் இன்றி வாசித்திருப்பது தவெக - பாஜக இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அவர் கூறினார்.

“என் மகன் அரசியலுக்கு வரமட்டார்!” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்

“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை... ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம் !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதற்கான தடை ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு சந்தித்த மோடி–டிரம்ப்... உலக கவனம் பெற்ற தருணம் !

ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருதரப்பு சந்திப்பு நடத்தினர். மோடியின் தலைமைத் திறனை பாராட்டிய டிரம்ப், இந்திய பயண நினைவுகள், ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி, இந்தியா–அமெரிக்க உறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார்.

“ரிலையன்ஸ், வாட்ஸ்அப் கூட்டுச் சதியா? டெலிகிராம் CEO-வின் பரபரப்பு குற்றச்சாட்டு!

மெட்டா நிறுவனத்திற்குப் பகுதிப் பங்கு உள்ள ரிலையன்ஸ் குழுமமும், அதன் போட்டியாளரான வாட்ஸ்அப்பும் இணைந்து, இந்தியாவில் தங்கள் செயலிக்குத் தடை விதிக்க லாபி செய்திருக்கலாம் என டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது முதல் சட்டபேரவை கூட்டம் !

தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.