சினிமா

கீர்த்தி சுரேஷ் நாயகியாக "டோரதி" கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம்

ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக
KS10Maestro1540 named DOROTHY
ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மதுரையின் பின்னணியில் படங்களை இயக்கி தனக்கென தனி டிரேட்மார்க்கை உருவாக்கியவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இதுவரை "பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ" ஆகிய 9 படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது தனது 10வது படத்திற்கு "டோரதி" என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு இளையராஜா இசையமைப்பதாக ஏற்கனவே சிறப்பு வீடியோ ஒன்றை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த வீடியோ அறிக்கையில் "A Dream.... A Blessing... ❤️" என்று இளையரஜாவுடன் இணைந்து பணியாற்றுவது கனவு என்றும் ஆசீர்வாதம் என்றும் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். இந்த படம் இளையராஜாவின் 1540 - வது படம் என்று தெரிவித்திருந்தார்.

இளையராஜா, கார்த்திக் சுப்பராஜ் இணையும் படம் என்று தெரிந்ததுமே ரசிகர்களும், சினிமா வல்லுனர்களும் கொண்டாடி வந்த நிலையில், தற்போது படத்தின் பெயரையும், படம் வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு "டோரதி" என் பெயரிடப்பட்டுள்ள நிலையில் கதை நாயகியை முன்னிலைப்படுத்தி இருக்கும் என்பதை குறிக்கும் விதமாக போஸ்டர் அமைந்தது கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த கேரில் முன்னணி நாயகியான கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் வருகிற செப்டம்பர் 25 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் போஸ்டரில் அறிவித்திருந்தனர்.

அதுமட்டுமின்றி, படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் நடிப்பதாகவும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவில் "எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான, பல ஆண்டுகளாக நான் உருவாக்க விரும்பிய ஒரு கதை இப்போது திரைப்படமாகிவிட்டது. அதுவும் இளையராஜா இசையமைப்பில்.. மேலும், இத்திரைப்படம் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) உலக அளவில் முதல்முறையாகத் திரையிடப்பட அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்... வரும் செப்டம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இம்முறை எங்கள் "டோரதி"க்காக இன்னும் சற்று அதிகமாகவே!" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே மற்றும் சிக்யா எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தின் கபூர் & அச்சின் ஜெயின் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக படக்குழு அறிவித்தது.

கார்த்திக் சுப்பராஜ் படங்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு, தற்போது இளையராஜாவின் இசையில் கார்த்திக் சுப்பராஜ் படம் எப்படி இருக்குமோ என்ற தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் உள்ளனர்.