பீகார் மாநிலம் பங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி குஜராத்தின் மஞ்சள்பூர், மத்தியப் பிரதேசத்தின் ததியா மற்றும் பீகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 3) காலை தொடங்கி நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகித்து வந்தார். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 24-வது சுற்று முடிவில், அவர் தனது அருகாமையிலுள்ள பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை விட 13,868 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையில் இருந்தார். இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட இந்த வாக்கு வித்தியாசம் அதிகம் என்பதால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாரில், பிரசாந்த் கிஷோர் பெற்றுள்ள இந்த வெற்றி அம்மாநில அரசியலில் மிக முக்கியக் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஏன்னென்றால், பங்கிப்பூர் தொகுதி கடந்த 31 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்து வந்தது.
இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த நிதின் நவீன், பாஜக தேசியத் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்பாக இத்தொகுதியில் அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹா பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக இருந்த நிதீஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினரானதைத் தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து விலகிய சூழலிலும் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.
தன் வாழ்நாளின் முதல் நேரடித் தேர்தலில் போட்டியிட்டு, பாஜகவின் பாரம்பரியக் கோட்டையைக் கைப்பற்றியுள்ள பிரசாந்த் கிஷோரின் இந்த வெற்றி, வரவிருக்கும் பீகார் அரசியல் சூழலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

LIVE 24 X 7