டெல்லிக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளது. அங்குள்ள உணவகப் பகுதியில் திடீரெனத் தீப் பிடித்து, கரும்புகை வெளியேறத் தொடங்கியதால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உணவகத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஏற்பட்ட எதிர்பாராத மின்கசிவு (Short Circuit) காரணமாகவே இந்தத் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாகத் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவிதமான உடல்நலப் பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LIVE 24 X 7