நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திபெத்தில் சிக்கியுள்ள 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் சிக்கிய 103 தமிழர்கள்:
நேபாளத்தில் சிக்கியிருந்த 103 தமிழர்களில் 21 பேர் ஏற்கெனவே சென்னை வந்தடைந்துள்ள நிலையில், திபெத்தில் சிக்கியுள்ள 39 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அரசு தெரிவித்திருப்பது அவர்களது குடும்பத்தினருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மீதமுள்ள தமிழர்களையும் விரைவில் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மீதமுள்ளவர்களில் திபெத்தில் தற்போது 39 தமிழர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
நேபாளம் அழைத்து வரப்படுகின்றனர்:
திபெத்தில் சிக்கியுள்ள 39 தமிழர்களும் நாளை பாதுகாப்பாக நேபாளத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். அவர்கள் நாளை மாலை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் அவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
டெல்லி வந்தடைந்த பின்னர், வரும் 31-ம் தேதி மாலை 39 தமிழர்களும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
டெல்லியிலிருந்து சென்னை, கோவை:
இதில், 33 பேர் விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். மீதமுள்ள 6 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அன்றிரவே அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
திபெத்தில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை விரைவாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், நேபாளம் மற்றும் திபெத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலவரத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும் பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது.

LIVE 24 X 7