நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் உள்ளிட்டோரைத் தாக்கியதாக, திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் சூழல் வாக்குச்சாவடிக்கு வெளியே இரு தரப்பினரும் நேரடியாகத் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு வன்முறையாக மாறியது. அப்போது திமுக தரப்பினர் தவெக வேட்பாளரை அச்சுறுத்தும் வகையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையிலும் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகத் துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் தரப்பில் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு மீது சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LIVE 24 X 7