தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, வீட்டு வசதி திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விவாதத்தின்போது அமைச்சர் ஆனந்த், முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட வீட்டு வசதி திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அரசிடம் இருப்பதாகவும், அவற்றை முழுமையாக வெளியிட்டால் எதிர்க்கட்சியினர் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், “ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வலுவான ஆதாரங்கள் அரசிடம் உள்ளன. கடந்த வாரம் நிதியமைச்சரும் மூன்று துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான கோப்புகள் தனது மேஜையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்தக் கோப்புகளைத் திறக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள். சரியான நேரத்தில் உரிய தகவல்கள் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் நிலையில், அவற்றின் அடிப்படையில் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே, தனது உரையைத் தொடர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, மக்களிடம் அன்புடனும் பரிவுடனும் பழகியதால்தான் ஒரே தொகுதியில் இருந்து ஏழு முறை வெற்றி பெற்றதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்யின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.

LIVE 24 X 7