தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினரிடையே பிளவு தீவிரமடைந்துள்ள சூழலில், சென்னையில் இன்று கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்குப் பதிலாகப் புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதனால் அ.தி.மு.க.வில் இரு பிரிவுகள் உருவாகி மோதல் முற்றியுள்ளது.
பொதுக்குழுவைக் கூட்ட வேலுமணி தரப்பு முயற்சி
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பொதுக்குழுவைக் கூட்டி அவரைப் பதவியிலிருந்து நீக்க வேலுமணி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது. அ.தி.மு.க. விதிகளின்படி பொதுக்குழுவைக் கூட்ட 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், மொத்தமுள்ள 2,400 உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறும் பணிகளில் அவர்கள் இறங்கியுள்ளனர். மேலும், சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் கொறடா பதவிகளில் தங்கள் தரப்பை அங்கீகரிக்கக் கோரி இரு தரப்பும் அவைத் தலைவரிடம் தனித்தனியே கடிதம் அளித்துள்ளதால் சட்ட ரீதியான சிக்கலும் எழுந்துள்ளது.
ராயப்பேட்டையில் பலத்த பாதுகாப்புடன் கூட்டம்
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்முறையாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 19) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இக்கூட்டத்தில், கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் அவர்களின் பதவிகளைப் பறிப்பது குறித்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை 17 மாவட்ட செயலாளர் வருகை தந்துள்ளனர். மோதல் சூழல் நிலவுவதால் அ.தி.மு.க. அலுவலகப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LIVE 24 X 7