தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, தனது பிறந்தநாளான ஜூன் 4-ஆம் தேதி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்த தொடர் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மூலமாகத் தமிழக மக்களிடையே அண்ணாமலை பரவலான கவனத்தைப் பெற்றிருந்தார். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது மாநிலத் தலைவர் பதவியை இழந்தார். அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த அண்ணாமலை, தேர்தல் பணிக்குழுவிலிருந்து விலகியதோடு, தேர்தலில் போட்டியிட விருப்பமனுவும் தாக்கல் செய்யவில்லை. அதிமுகவிடம் சிங்கநல்லூர் தொகுதியைக் கேட்டுப் பெற்று அண்ணாமலையைப் போட்டியிட வைக்க பாஜக தலைமை முயன்றபோதும், அதிமுக அதற்கு முன்வரவில்லை. இதனால் அவர் வெறும் பிரசாரத்தில் மட்டுமே ஈடுபட்டார்.
தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. இதற்கிடையே, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அல்லது ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி தலைமை அவரைக் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்தச் சூழலில், ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்தநாளில் புதிய கட்சியை அண்ணாமலை தொடங்கவுள்ளதாகவும், இதற்காக அவரது ஆதரவாளர்கள் பாஜக மாவட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.
மேலும், கோவையில் "தீரன் அண்ணாமலை படை" என்ற பெயரில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இத்தகவல் டெல்லி தலைமைக்குத் தெரிந்ததைத் தொடர்ந்து, அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக டெல்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப, அண்ணாமலை இன்று டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
டெல்லி தலைமையின் சமாதானத்தை ஏற்று அவர் தனது முடிவைத் தள்ளி வைப்பாரா அல்லது ஜூன் 4-இல் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா என்பது தற்போதைய பெரும் கேள்வியாக உள்ளது.

LIVE 24 X 7