திமுகவுடன் கூட்டணியா? – சூசகமாக சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்!
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி உருவாகிறதா என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி உருவாகிறதா என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தயாராகிவரும் நிலையில், மா.செக்கள் மாற்றம் மற்றும் மா.செக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமூகநீதி பேசும் திமுகவில் பெண் மா.செக்கள் மற்றும் தலித் மா.செக்கள் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்
தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 23ம் தேதி முதல் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், ராஜ்நாத் சிங்கை திமுக அழைத்து வந்தது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக கூறியிருக்கிறார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து சம்பாய் சோரன் விலகுவதாக அறிவித்துள்ளத ஜார்க்கண்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்கும் என அண்ணாமலை உறுதிப்படுத்திய காரணத்தால், கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
''ஆளுநர் மாளிகையில் கால் வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் அப்பா பெயரில் நூறு ரூபாய் நாணயம் வெளியீடு என்ற உடன் பாஜகவுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறீர்கள். இவ்வளவுதான் உங்கள் கோபமா?'' என்று திமுகவை சீமான் சாடினார்.
''தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் கருணாநிதி எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு மக்களால் பலமுறை தேந்தெடுக்கப்பட்ட கருணாநிதி ஒரு அரசியல் தலைவராக, முதலமைச்சராக இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 18) அவரது பெயரில் ரூ. 100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடுகிறார்.
மேயராக பதவியேற்ற பிறகும் ராமகிருஷ்ணன் சைக்கிளை கைவிடவில்லை. தனது வார்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளில் செல்லும் அவர், தினம்தோறும் குப்பைகள் அள்ளப்படுகிறதா? குடிநீர் ஒழுங்காக வருகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்களிடம் கேட்டறிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்.
''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை என்று திருமாவளவனின் கருத்தால் சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.
Journalists Condemn Dr Krishnaswamy on Arunthathiyar Reservation : அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, தகாத வார்த்தையால் பதிலளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
DMK Candidates in Upcoming Elections : 2026 சட்டமன்றதேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக, கடந்த மாதமே திமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பக்கம் அதிமுகவும் தனது பங்கிற்கு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது. இப்படி தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன.
DMK District Secretaries Meeting 2024 : திமுகவின் பவள விழா உட்பட முப்பெரும் விழாவை, செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் நடத்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.