2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் மொராக்கோ அணிகள் தங்களது ஆட்டங்களில் முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
சியாட்டிலில் நடைபெற்ற குரூப் 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அமெரிக்க அணி ஆதிக்கம் செலுத்திய இந்த ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ் எதிர்பாராதவிதமாக 'ஓன் கோல்' (Own Goal) அடிக்க, அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து முதல் பாதியின் இறுதிக்கட்டத்தில் (43-வது நிமிடம்), அமெரிக்க வீரர் அலெக்ஸ் ப்ரீமேன் ஒரு அட்டகாசமான கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய அணி கோல் அடிக்கக் கடுமையாகப் போராடிய போதிலும், அமெரிக்காவின் பலமான தடுப்பாட்டத்தால் அது முறியடிக்கப்பட்டது. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அமெரிக்கா, நாக் அவுட் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.
ஒரே கோலில் வென்ற மொராக்கோ
போஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கிய குரூப் 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் மொராக்கோ அணிகள் களம் கண்டன. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே மொராக்கோ வீரர் பிராஹிம் டியாஸ் கொடுத்த அருமையான பாஸைப் பயன்படுத்தி, இஸ்மாயில் சாய்பரி பந்தைக் கோலாக மாற்றி அதிரடித் தொடக்கம் தந்தார்.
இதன் மூலம் மொராக்கோ 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பிறகு ஆட்டத்தின் இரண்டு பாதிகளிலும் ஸ்காட்லாந்து அணி ஆட்டத்தைச் சமன் செய்யப் பலமுறை தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியது. எனினும், மொராக்கோ அணியின் அரண் போன்ற தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை. இறுதியில், இஸ்மாயில் சாய்பரி அடித்த அந்த ஒற்றைக் கோல் மூலம் மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி, இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

LIVE 24 X 7