விளையாட்டு

ICC தரவரிசையில் இந்தியா முதலிடம்; 119 புள்ளிகளுடன் முன்னிலை !

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

ICC தரவரிசையில் இந்தியா முதலிடம்; 119 புள்ளிகளுடன் முன்னிலை !
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 118 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஐசிசி வெளியிட்ட வருடாந்திர தரவரிசைப் பட்டியலின்படி, அயர்லாந்து ஜிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி 11வது இடத்திற்கும், அமெரிக்கா ஸ்காட்லாந்தை முந்தி 13வது இடத்திற்கும், ஐக்கிய அரபு அமீரகம் கனடாவை முந்தி 19வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

டாப் 10 பட்டியல்:

ஒரு நாள் கிரிக்கெட் இந்தியா மீண்டும் முதலிடம்

* இந்தியா- (ரேங்க் 1) - (118 ரேட்டிங்)

* நியூசிலாந்து- ( ரேங்க் 2)- (113 ரேட்டிங்)

* ஆஸ்திரேலியா- ( ரேங்க் 3)- (103 ரேட்டிங்)

* தென் ஆப்ரிக்கா- ( ரேங்க் 4)- (102 ரேட்டிங்)

* பாகிஸ்தான் - ( ரேங்க் 5)- (100 ரேட்டிங்)

* இலங்கை - ( ரேங்க் 6)- (96 ரேட்டிங்)

* ஆப்கானிஸ்தான்- ( ரேங்க் 7)- (93 ரேட்டிங்)

* இங்கிலாந்து- ( ரேங்க் 8)- (89 ரேட்டிங்)

* வங்கதேசம் - ( ரேங்க் 9)- (86 ரேட்டிங்)

* வெஸ்ட் இண்டீஸ் - ( ரேங்க் 10)- (73 ரேட்டிங்)

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது, அணியின் நிலையான செயல்திறனையும் சர்வதேச அரங்கில் அதன் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.