19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தொடர் தோல்விகளால் தவித்து வரும் டெல்லி கேபிடல்ஸ் அணியை இன்று ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 4-வது இடத்தில் வலுவாக உள்ளது. மறுபுறம், ஆடிய 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள டெல்லி அணி 7-வது இடத்தில் தள்ளாடி வருகிறது. குறிப்பாக, கடந்த மூன்று போட்டிகளில் அந்த அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது டெல்லிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சுவாரஸ்யமாக இரண்டு அணிகளும் தலா 15 வெற்றிகளைப் பெற்று சமபலத்துடன் உள்ளன. சொந்த மைதானத்தில் விளையாடும் ராஜஸ்தான் அணி தனது ஆதிக்கத்தைத் தொடர முயற்சிக்கும் அதேவேளையில், டெல்லி அணி சரிவிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்பக் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7