தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய், வருகிற ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன், கரூரில் பல்வேறு அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் முதல்வர் விஜய் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக கரூர் சென்றிருந்த விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக விஜய்யும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களால் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூரில் சந்திக்க முடியாத நிலையில், கடந்த 2025 அக்டோபர் 27-ஆம் தேதி அந்த குடும்பங்களை சென்னைக்கு அழைத்து, மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
அந்த சந்திப்பின்போது, "கரூருக்கு நேரில் வந்து உங்களைச் சந்திப்பேன்" என்று விஜய் உறுதியளித்திருந்தார். தற்போது முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கரூர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LIVE 24 X 7