தமிழ்நாடு

வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கவலையில்லை: இந்த 12 ஆவணங்களைப் இருந்தால் போதும்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.

வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கவலையில்லை: இந்த 12 ஆவணங்களைப் இருந்தால் போதும்!
Voters
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.

நாளை (ஏப். 23) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ள சூழலில், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லாதவர்கள் புதிய டிஜிட்டல் அட்டையை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று, வாக்காளர் அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்தி ஓ.டி.பி. மூலம் டிஜிட்டல் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

அனுமதிக்கப்படும் மாற்று ஆவணங்கள்

ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்குப் புத்தகங்கள், ஓய்வூதிய ஆவணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட அடையாள அட்டை மற்றும் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளும் இதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் 'பூத் சிலிப்' எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு, ஒருவரது வாக்காளர் விவரங்களைத் தெரிந்துகொள்ள மட்டுமே பயன்படும்; அதனை அடையாள ஆவணமாகக் காட்டி வாக்களிக்க முடியாது. அதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஒருவரால் ஓட்டுப் போட முடியும். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மேற்கூறிய எந்த ஆவணங்களைக் காட்டினாலும் வாக்களிக்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.