தமிழ்நாடு

தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 குறைவு!
Gold Rate
சென்னையில் சர்வதேசப் பொருளாதாரக் காரணிகளால் கடந்த சில நாட்களாக அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று (ஜூன் 19) நகைப் பிரியர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வரலாற்றுச் சரிவைக் கண்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே சென்னையில் தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்து வந்தது. கடந்த ஜூன் 16 செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80-ம், புதன்கிழமை ரூ. 240-ம் குறைந்திருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை சவரனுக்கு மேலும் ரூ. 640 குறைந்து ரூ. 1,11,600-க்கு விற்பனையானது. இந்தத் தொடர் சரிவின் உச்சகட்டமாக, இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,040 என அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,08,560 என்ற நிலைக்கு வந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ. 4,000 வரை சரிந்துள்ளது சாமானியர்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

இன்றைய அதிரடி விலை வீழ்ச்சியின்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 380 குறைந்து, ரூ. 13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ. 15 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கு விற்று வருகிறது. மேலும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ. 15,000 என்ற அளவில் பெருமளவு சரிந்து, சந்தையில் ரூ. 2.55 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.