K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024

JUST IN | 2 சிறுவர்களை கொலை செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே யோகராஜ் என்பவருடைய 2 மகன்கள் கொலை. 2 சிறுவர்களை கொலை செய்ததாக யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர் கைது

”இதனால் திமுகவின் சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும்” - கடம்பூர் ராஜு கடும் தாக்கு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

"உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி"-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை வழங்குவார் - கோவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

லட்டில் விலங்கு கொழுப்பு!! - ஆடிப்போன இந்தியர்கள்.. "உண்மையா..?"

லட்டில் விலங்கு கொழுப்பு!! - ஆடிப்போன இந்தியர்கள்.. "உண்மையா..?"

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

#BREAKING || தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜா

தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.

#BREAKING | தீட்சிதர்கள் விற்ற நிலம் - நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#BREAKING || தேவநாதனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

#BREAKING || திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக முந்தையை ஆட்சியில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக சந்திரபாபு நாயடு குற்றம்சாட்டியிருந்தார்.

தாய் கையால் குழந்தைகளுக்கு விஷம்... தென்காசியில் நடந்த பயங்கரம்..

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே அரளி விதையை சாப்பிட்டு 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில் ஒரு சிறுவன் பலியான நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கல்வராயன் மலைப்பகுதி விவகாரம்... தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொந்த மண்ணில் கெத்து காட்டிய அஸ்வின்... சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர் அஸ்வின் சதம் விளாசினார்.

திருவள்ளூரில் தொடரும் அவலம்.. தீண்டாமை வேலி அமைத்து ஒதுக்கப்படும் மக்கள்..

திருவள்ளூர் மாவட்டம் அம்மணம்பாக்கம் பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் தீண்டாமை வேலி அமைத்ததால் பழங்குடியின, ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீண்டாமை வேலி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.   

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு... தமிழக அரசுக்கு கறாராக உத்தரவிட்ட நீதிமன்றம்

Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

#BREAKING : துணை முதலமைச்சராகும் உதயநிதி.. வெளியானது உறுதியான தகவல்

Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. நேற்று அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... தமிழக அரசின் திடீர் உத்தரவு.. கொந்தளிக்கும் மக்கள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

பட்டாசு ஆலை வெடிவிபத்து – சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதவி பெண் நடன இயக்குநருக்கு பாலியல் தொல்லை... பிரபல நடன இயக்குநர் கைது

உதவி பெண் நடன இயக்குநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல நடன இயக்குநர் ஜானியை கோவாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்

ஹோட்டலில் அதிகாரிகள் அதிரடி சோதனை.. முட்டையில் காத்திருந்த அதிர்ச்சி

திருச்சி துறையூரில் சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள் ஹோட்டலில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒரு கட்சியின் ஆசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடியுள்ளார்.

EPS Case Update : தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இபிஎஸ் ஆஜராவதில் இருந்து விலக்கு

Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Kanguva Movie Update : கங்குவா திரைப்படம் ரிலீஸ் எப்போது..? - படக்குழு கொடுத்த மாஸ் Update

Actor Suriya Kanguva Movie New Release Date Update : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.