K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 21-09-2024

இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பை இங்கே காணலாம்.

Singer Mano Sons Attack Issue : பாடகர் மனோ மகன்கள் விவகாரம்... நடப்பது என்ன? | Singer Mano Wife

Singer Mano Sons Attack Issue : பாடகர் மனோ மகன்களின் வழக்கில் நடப்பது என்ன?

SC Youtube Hacked: உச்சநீதிமன்றத்தின் Youtube பக்கம் ஹேக்.. உச்சக்கட்ட பதற்றம்!

SC Youtube Hacked: உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர்

Vettaiyan Audio Launch : வேட்டையன் இசை வெளியீட்டு விழா - வெயிட்டிங்கில் வெறியான ரசிகர்கள்

Vettaiyan Audio Launch: ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Nayakaneri Panchayat President : நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி

நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி

மாணவர்களே மறக்காதீர்கள்..!! - வேண்டுகோள் வைத்த இபிஸ்

மாணவர்கள் குறிக்கோள் தவறாமல் கல்வி கற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகளாக பணிக்கு வராமல் ஊதியம்.. சிக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் முள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன் அனுமதியின்றி சுமார் 8 ஆண்டுகளாக அவர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

நெய்வேத்திய பிரசாதத்திற்கும் கலப்பட நெய்யே... தேவஸ்தான நிர்வாக அதிகாரி பகீர் குற்றச்சாட்டு

திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச் சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நெய்வேத்திய பிரசாதம் தயாரிப்பிற்கும் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரம் - ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் ஜூன், ஜூலையில் வாங்கப்பட்ட நெய்யில் கலப்படம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வில் ஈடுபட்டார். 

பழநி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்? - தமிழக அரசு விளக்கம்

பழநி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக சமூக வலைதளத்தில் வந்த செய்தியை நம்ப வேண்டாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

SS ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல்

சென்னை கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள SS ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 14-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடைக்கு சீல் வைத்தனர் 

உதயநிதி துணை முதலமைச்சராவார்... அடித்து சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கலைஞர் எப்படி ஸ்டாலினை உருவாக்கினாரோ அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உதயநிதியை துணை முதலமைச்சராக உருவாக்குவார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தரமற்ற உணவு விற்பனை.. பிரபல ஹோட்டலுக்கு சீல்

கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டலில் உணவை உட்கொண்ட சிறுமி உட்பட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்ததை கண்டறிந்து கடைக்கு சீல் வைத்தனர்.

சர்ச்சையான 'திருப்பதி லட்டு' - நெய் சப்ளை நிறுவனம் விளக்கம்

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், எங்கள் நெய்யின் தரத்தில் குறை இருப்பதாக நினைத்தால் அதை எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என நெய் சப்ளை நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சூட்கேசில் பெண் உடல்.. தரதரவென இழுத்து சென்ற கொடூரன் - அதிர்ச்சி காட்சி வெளியீடு

சென்னை துரைப்பாக்கம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து இழுத்து செல்லும் சிசிடிவி வெளியானது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் 15 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் 15 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.

கடவுளை வைத்து அரசியல் செய்கிறார் சந்திர பாபு நாயுடு.. - ஜெகன் மோகன் குற்றச்சாட்டு

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார் 

அரசுப்பேருந்தை அலட்சியமாக ஓட்டிய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

லட்டில் விலங்கு கொழுப்பு.. ஆந்திர முதலமைச்சர் விளக்கமளிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் விளக்கம் கேட்டுள்ளார்

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

RSS அணிவகுப்பு... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

வருவாய் கோட்டாட்சியர் வாகனம் மோதிய விபத்து... பரிதாபமாய் பறிபோன உயிர்கள்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே வருவாய் கோட்டாட்சியர் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி... விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் 4 காவலர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் அவரை போலீசார் தாக்கி வந்தது விசாரணையில் அம்பலமானது.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி சீருடையில் மாணவிக்கு வளைகாப்பு.. வைரலான ரீல்ஸ்... ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.