கடந்த 4 மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 14 அம்ச கோரிக்கைகளின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் நேற்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தான நிலையில், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஹார்மூஸ் நீரிணை நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். உலகின் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை திறக்கப்படுவது சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நேற்று இரவு தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தல் முழுமையாக ஒழிக்கப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் பாகிஸ்தான் முன்னிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் முறைப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், லெபனானில் ஏற்பட்டுள்ள புதிய பதற்ற சூழல் காரணமாக ஈரான் தனது பிரதிநிதி குழுவை அனுப்புவதில் தாமதம் காட்டியதால், இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நேரத்திலேயே லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் அமைதி முயற்சிகள் எந்த திசையில் செல்லும் என்பது குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

LIVE 24 X 7