மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், பாகிஸ்தான் மத்தியஸ்தக் குழு வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் புதிய போர் நிறுத்த முன்மொழிவை வழங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அடுத்தகட்ட முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கக் குழுவினர் வராததால், பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தனது புதிய திட்டத்தை ஈரான் அளித்துள்ளது. இந்த முன்மொழிவில் போரை நிறுத்த மூன்று முக்கிய நிலைகளை ஈரான் நிபந்தனைகளாக முன்வைத்துள்ளது.
முப்பரிமாணத் திட்டம்
ஈரானின் இந்த முன்மொழிவின்படி, முதற்கட்டமாகப் போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்; மேலும் ஈரான் மற்றும் லெபனான் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும். இரண்டாம் கட்டமாக, இப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கப்பட வேண்டும். அத்துடன், சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, கடல்வழிப் போக்குவரத்து சீர்செய்யப்பட வேண்டும். இந்த இரண்டு நிலைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, இறுதியாக அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு
ஈரானின் இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில், "அணு ஆயுத உற்பத்தியை ஈரான் முழுமையாக நிறுத்துவதாக அறிவித்தால் மட்டுமே நிரந்தரப் போர் நிறுத்தம் சாத்தியம்" என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது. ஆனால், ஈரான் இதனை இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையாக வைத்துள்ளது. இந்த முரண்பட்ட நிலைப்பாடுகளால் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் மோதல் வெடிக்குமா என்ற பரபரப்பு உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.

LIVE 24 X 7