K U M U D A M   N E W S

அமைச்சர்

உலகிலேயே முதன்முறையாக... தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ்!

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் செய்யும் வசதி கொண்டுவர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறியுள்ளது-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சிக்காலத்தில் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து.. நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பஹல்காம் தாக்குதல் மற்றும் எல்லையில் நிலவும் சூழல் குறித்தும் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சிறுபான்மை மக்களுக்கு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார்- அமைச்சர் சா.மு.நாசர்

மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி

கோவையில் ஜல்லிக்கட்டு.. 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

கோவையில் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருணாநிதி சொன்னதை பேரவையில் நினைவுகூர்ந்த அமைச்சர் துரைமுருகன்...உற்று கவனித்த முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி குறித்து கருணாநிதி சொன்னதை பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகூர்ந்ததை முதலமைச்சர் உற்று கவனித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா–அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கு.. புதிய சிக்கலில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் விடுவிப்பு ரத்து.. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஒருவரையும் விடமாட்டோம்” – ராஜ்நாத் சிங்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விடமாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து சதி செய்தவர்களை எவரையும் விட மாட்டோம்.

அமைச்சர் துரைமுருகன் தொடர்பான சொத்துகுவிப்பு வழக்கு.. 6 மாதத்திற்கு விசாரணையை முடிக்க உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனைமலை திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை- அமைச்சர் துரைமுருகன்

ஆனைமலை பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவையில்லை-தமிழக அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்படாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

போராட்டம் வாபஸ்...நாளை முதல் விசைத்தறிகள் இயங்கும்...பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோவையில் 3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 33 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

பாகிஸ்தானில் இந்து அமைச்சர் மீது தாக்குதல் – பிரதமர் கண்டனம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் புதிய கால்வாய்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேரணி நடத்திய போராட்டக்காரர்களால் இந்து அமைச்சர் தாக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு: அதிமுக போராடுவது போல் நாடகமாடுகிறது - அமைச்சர் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது போராடுவது போல் நாடகமாடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஆட்சியில் 412 இடங்களில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.அப்பயிற்சியை கூட திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது

பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...அமைச்சர் ரகுபதி

குடியரசு துணைத்தலைவர் பேசியுள்ளது உச்சநீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி என ரகுபதி தெரிவித்துள்ளார்.