உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்
2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என FIDE அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம்குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் FIDE தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதால் அவரது தாய் ஆனந்த கண்ணீராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பவுள்ளார். சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற மூவரும் வரும் ஜூலை 13ம் தேதி பூமிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் டீ மாஸ்டர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து கடைக்கு வந்த 50 நபர்களுக்கு இலவசமாக ஆவின் கடை உரிமையாளர் தேநீர் வழங்கியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.