K U M U D A M   N E W S

TN Budget: ஜப்பானிய ஹைக்கூ கவிதை..பெற்றோரை இழந்த குழந்தைக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

திமுக வெளியிடும் பட்ஜெட் : காலியாக இருப்பதில் வியப்பில்லை.. அண்ணாமலை விமர்சனம்

வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக் மூலம் 40,000 கோடி ஊழல்? பட்ஜெட் உரை வெளிநடப்பு குறித்து EPS பேட்டி

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

TN Budget 2025: மூன்றாம் பாலினத்தவர்களுக்காக விரிவுப்படுத்தப்படும் திட்டங்கள்.. அரசின் முக்கிய அறிவிப்பு

மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Budget 2025: மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? கவலைய விடுங்க.. வெளியான சூப்பர் அப்டேட்

மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்: 2000 ஏக்கரில் சென்னை அருகே புதிய நகரம்- அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்பினை வெளியிட்டு வரும் நிலையில், சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.

TN Budget 2025: வெளிநாடுகளில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி.. ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தியப் பெருநகரங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும், குறிப்பாக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ள தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TN Budget 2025: சென்னை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதில் புதிய மாற்றம்- ரூ.2423 கோடி ஒதுக்கீடு

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் வழங்கும் முறையினை மேம்படுத்தும் வகையில் “முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம்”  2423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.

தமிழக பட்ஜெட் 2025: அமளியில் ஈடுபட்ட அதிமுக.. அதிரடி வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் திமுகவிற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TN Budget 2025: ரூ.3796 கோடியை வழங்காத மத்திய அரசு- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக நிர்வாகிகளோடு விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 19 கட்சி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை  அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.முன்னதாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

ரூபாய் குறியீடு மாற்றம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலச்சினையில் 'ரூ' என்ற தமிழ்வார்த்தையை தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்தியிருக்கிறது. ரூபாய் குறியீட்டை மாற்றியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

936 இடங்களில் நேரலை – அதிகரிக்கும் தமிழக பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு

மார்ச் 15ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி...ராமதாஸ் சாடல்

தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதைக் கொண்டு எத்தகைய கடின இலக்கையும் அடைய முடியும். ஆனால், மது, கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு மனித வளத்தை தமிழக அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

22 ஆண்டு கால கோரிக்கை...நிறைவேற்றி கொடுத்த அமைச்சர்...நெகிழ்ந்து போன மக்கள் 

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்.. டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்

வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு

தமிழ் மொழியை மத்திய அரசு சிறுமைப்படுத்தும் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு  பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்

ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.    

மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

மகளிர் மேம்பாட்டுக்கு தனித்துறை.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை..!

தமிழகத்தில் சமூக நலத்துறையிலிந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென (Women Empowerment) தனி துறையை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தவெக பேனர்களை அகற்றிய போலீசார்..

வேலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றம்

பரபரப்பான அரசியல் சூழலில் TVK Vijay-யின் அடுத்த திட்டம்

கடலூரில் மீனவர்களை ஒன்று திரட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்

இருமொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு அப்பாவு பெருமிதம்

இருமொழி கொள்கையால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது - சி.அப்பாவு