த.வெ.க வழக்கு.. ஜூன் மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம்!
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுவதாகவும், அவர்களின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாதி, மதக்கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதால், நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தண்டனைகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என்று செய்திகள் வெளிவருகின்றன.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று கோவையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கோவைக்கு சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களுக்கு Y- பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இதுவரை 2000 அரசு அலுவலகங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
தமிழகத்தில் திமுக ஆட்சி இன்னும் 10 மாதங்கள் மட்டும் தான் என்று அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் ’ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என கொளுத்திப்போடப்பட்ட திரி அறிவாலயத்தில் புகையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விசிக, காங்கிரஸை தொடர்ந்து காம்ரேட்களும் பல டிமாண்டுகளை திமுக தலைமையிடம் வைப்பதாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது
கருமத்தம்பட்டியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை விசைத்தறியாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கேள்விகளால் துளைத்து எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.