‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 17) மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், “மயிலாடுதுறை மாவட்டம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம். இதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக அரசு. விவசாயிகளின் விளைநிலங்களை பறிக்கப் பார்த்தவர் ஸ்டாலின். மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்தவரும் ஸ்டாலின் தான்.
விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் திமுக அரசு
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிமுக ஆட்சியில் நல்ல விலை கிடைத்தது. திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை. திறந்தவெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் நிலை உள்ளது. நெல்மணிகள் மழையில் நனைந்து விவசாயிகள் வேதனை அடைகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் முட்டைக்கு ரூ.60 லஞ்சம் வாங்கப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் இந்த அரசு தேவையா? டெல்டா மாவட்டம் திமுகவின் கோட்டை என சொல்கிறார்கள். அந்த கோட்டை எல்லாம் நொறுங்கிப் போய்விட்டது.
கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைத்த திமுக
முதலமைச்சர் ஸ்டாலினின் நடிப்பு எடுபடாது. தினம்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து போஸ் கொடுப்பதுதான் அவரது பணி. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 10 சதவீத அறிவிப்புகள் கூட தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைத்தது திமுக.
பொய் சொல்வதற்காக முதல்வருக்கு நோபல் பரிசு
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். திமுக ஆட்சியில் சொல்வது அனைத்தும் பொய்தான். பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அதை மு.க.ஸ்டாலினுக்கு தரலாம். பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம் என ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறைவேற்றவில்லை. இதுவே ஸ்டாலினின் டபுள் கேம். தற்போது தமிழ்நாடு போராட்ட களமாக உருவாகியுள்ளது.
தந்தை அடையாளத்தில் நான் வரவில்லை
நான் பேருந்தில் வந்ததால் சுந்தரம் டிராவல்ஸ் என மு.க.ஸ்டாலின் என்னை விமர்சித்தார். நான் விவசாயி இந்த வாகனத்தில் தான் வருவேன். உங்களுடைய டிரஸ்டில் மட்டும் ரூ.8000 கோடி உள்ளது. நீங்கள் பென்ஸ், ஹெலிகாப்டர், தனி விமானத்தில் கூட வரலாம். நான் இது போன்ற வண்டியில் தான் வரவேண்டும். தமிழகம் முழுவதும் ஓட்டை உடைசலான பேருந்துகள் உள்ளது. நீங்கள் எனது பஸ்ஸை பற்றி பேசுகிறீர்களா? இது மண்வெட்டி பிடித்த கை, ஏர் ஓட்டிய கை. உங்களைப் போன்று கோட் சூட் போட்டுக்கொண்டு போட்டோ எடுக்க தெரியாது.
நீங்கள் வந்த பாதை வேறு, நான் வந்த பாதை வேறு. உங்களைப் போன்று தந்தை அடையாளத்தில் நான் வரவில்லை. கஷ்டப்பட்டு உழைத்து அதிமுகவில் உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். இதுபோன்று திமுக ஆட்சியில் கஷ்டப்பட்டு உழைத்தால் உயர் பதவிக்கு வர முடியுமா? திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் பொறுப்புக்கு வர முடியும். உதயநிதி திமுகவுக்கு என்ன செய்தார். துரைமுருகன் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்தார். அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.
திமுக ஆட்சியின் சாதனை இதுதான்
மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். திமுக ஆட்சியில் கரண்ட் பில் விலையை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியவர் மு.க.ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட லேப்டாப் அனைத்தும் கொடுக்கப்படும். கொள்ளையடித்தது மட்டும்தான் திமுக ஆட்சியின் சாதனை. கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.