பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில், அறுவைச் சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள்தண்டனை கைதியினை மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளது ஒரு கும்பல். இதுத்தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆயுள்தண்டனை கைதி சந்தன் மிஸ்ரா:
36 வயதான சந்தன் மிஸ்ரா என்பவர் 2011 ஆம் ஆண்டு ராஜேந்திர கேசரி என்பவரை கொலை செய்தார். இதுத்தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
பக்ஸர் பகுதியினை பூர்விகமாக கொண்ட சந்தன் மிஸ்ரா மீது, கொலை, கொள்ளை, கடத்தல் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தன் மிஸ்ராவிற்கு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை சந்தன் மிஸ்ரா நாடிய நிலையில், அவருக்கு பாட்னா உயர்நீதிமன்றம் மரண தண்டனையினை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சந்தன் மிஸ்ரா பியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார். பாட்னாவின் பெய்லி சாலையிலுள்ள பராஸ் எச்.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் நேற்றையத் தினம் (17-07-2025), காலை 7:15 மணியளவில், மருத்துவமனையில் இரண்டாவது மாடியிலுள்ள அறை எண் 209-ல் சிகிச்சைக்கு பிந்தைய ஓய்விலிருந்த சந்தன் மிஸ்ராவினை 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்றுள்ளது.
விசாரணையினை தொடங்கிய போலீசார்:
இதுத்தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரோலில் வெளிவந்த கைதி ஒருவரை, 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உயிரிழந்த சந்தன் மிஸ்ராவின் பரோல் இன்றோடு (18-07-2025) முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக பாட்னா காவல்துறை தரப்பில் கூறுகையில், “பரோலில் வெளிவந்த கைதியை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் முன்பகையினால் இந்த கொலை நடைப்பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது. பரோலில் வெளிவந்த குற்றவாளி கொலை சம்பவத்தில் பாதுகாப்பு காவலர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.