மேற்காசியப் போர் பதற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சமூகப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, அங்கு வரதட்சணையாக சிலிண்டர் கேட்கும் போக்கு அதிகரித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் முதலில் சமையல் எரிவாயு விநியோகத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் முடங்கியுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் சில குடும்பங்கள் வரதட்சணையாகச் சமையல் எரிவாயு சிலிண்டரைக் கோரத் தொடங்கியிருப்பது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வரதட்சணை பட்டியலில் இணைந்த சிலிண்டர்
வழக்கமாகத் திருமணங்களின் போது வழங்கப்படும் சீர் வரிசைப் பட்டியலில் கட்டில், பீரோ, மோட்டார் சைக்கிள் போன்றவற்றுடன் இப்போது சமையல் கியாஸ் சிலிண்டரும் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று மணமகன் வீட்டார் வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் வரும் காலத்தில் சிலிண்டர் கிடைப்பது கடினம் என்ற அச்சமே இந்த விசித்திரமான கோரிக்கைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அரசின் கடும் நடவடிக்கை
இத்தகைய புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. வரதட்சணையாகச் சமையல் எரிவாயு சிலிண்டர் கேட்டு மணமகளைத் துன்புறுத்தினால், சம்பந்தப்பட்ட மணமகன் குடும்பத்தின் கியாஸ் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
தற்போது நிலவும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிவாயு விநியோகத்தை அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பார்கள் என்றும், தேவையின்றிச் சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் அல்லது வரதட்சணையாகக் கோருபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

LIVE 24 X 7