நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய (வெட்டிய) சம்பவத்தில் நான்கு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது பயிற்சியாளர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சாதி ஆதிக்கத்தால் பதவி விலகிய பட்டியலின ஊராட்சி ஒன்றியத் தலைவரை கண்டுகொள்ளாத திமுகவுக்கு, சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு வில்லனாக மாறியுள்ளது அவரது குடும்பம்... குடும்பத்தினர் அளித்த தொந்தரவுகளை தாங்க முடியாத கணவர், அவரது மனைவியை குழந்தை போல தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க புகாரளித்துள்ளார். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.